நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! | கூலி படத்தை பார்த்துவிட்டு உதயநிதி, லதா ரஜினி வெளியிட்ட தகவல்! | பருத்திவீரன் சரவணன் நடிக்கும் போலீஸ் பேமிலி | ‛பாகுபலி' நாயகன் பிரபாஸுக்கு விரைவில் திருமணம்! | 'கூலி' படத்தின் வியாபாரம் : கோலிவுட் வட்டாரத் தகவல் | இன்று 92வது பிறந்தநாள் கொண்டாடுகிறார் பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா | கூலி முதல் ஷோ எங்கே தொடங்குகிறது? இதுவரை 11 லட்சம் டிக்கெட் விற்பனை | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தை எதிர்த்து வழக்கு | அன்று ரஜினி படத்தில் அவரது மகன், இன்று அவருடன் போட்டி | பிளாஷ்பேக் : தஸ்தாவெஸ்கி வாழ்க்கையின் தாக்கத்தில் உருவான 'முதல் மரியாதை' |
தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தில் தமிழில் அறிமுகமானவர் ஷெரீன். அதன்பிறகும் பல படங்களில் நடித்த அவர் பிக்பாஸ்-3 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். அதைத்தொடர்ந்து மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்க எடுத்த அவரது முயற்சிகளில் பலன் கொடுக்கவில்லை. இருப்பினும் தனது இன்ஸ்டாகிராமில் மட்டும் அவ்வப்போது வீடியோ, போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார் ஷெரீன்.
இந்த நிலையில், தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள எந்த மாதிரியான மாஸ்க் அணிய வேண்டும் என்பதை விளக்கும் வகையில் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ஷெரீன்.
அந்த வீடியோவில், முதலில் மாஸ்க்கே அணியாமல் ஒரு எரியும் மெழுகுவர்த்தியை ஊதி அணைக்கிறார். அதன்பிறகு சர்ஜிக்கல் மாஸ்க் அணிந்து ஊதுகிறார். அப்போதும் ஒரேமுறையில் அணைந்து விடுகிறது. அதையடுத்து இரண்டு மாஸ்க் அணிந்து அந்த மெழுகுவர்த்தியை அவர் ஊதி அணைக்கும்போது பல முறை ஊதிய பிறகே அணைகிறது. ஆனால் அதன்பிறகு துணி மாஸ்க்கை அணிந்து அவர் ஊதி அணைக்கும்போது மெழுகுவர்த்தி அணியவே இல்லை. இப்படியொரு செய்முறையை செய்து காட்டி, இரட்டை மாஸ்க் மற்றும் துணி மாஸ்க்கை அணிந்து கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்பதை புரிய வைத்துள்ளார் ஷெரீன்.