ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

கடந்த ஆறு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான பிரேமம் படம், மலையாளம் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது. குறிப்பாக அதில் மலர் டீச்சராக நடித்த சாய்பல்லவி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ஆனால் ஆரம்பத்தில் இந்த கேரக்டரில் அசினை நடிக்க வைக்க முயற்சித்ததாக தற்போது ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளார் இந்தப்படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்.
இதுபற்றி அவர் கூறும்போது, “முதலில் அந்த கதாபாத்திரத்தை மலையாள டீச்சராகத்தான் உருவாக்கி இருந்தேன். அதில் அசினை நடிக்கவைக்க முயற்சி செய்து அது முடியாமல் போனது. அதன்பிறகு ஸ்கிரிப்ட்டில் கொஞ்சம் மாற்றம் செய்து தமிழ் டீச்சராக மாற்றி, அதில் சாய்பல்லவியை நடிக்க வைத்தேன். என் சிறுவயதில் ஊட்டியில் படித்ததாலும், கல்லூரி படிப்பை சென்னையில் படித்ததாலும் இயல்பாகவே தமிழ் மீது எனக்கு ஆர்வம் இருந்தது” என கூறியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.