தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தனுஷ் நடித்த திருடா திருடி, சீடன், அமீர் நடித்த யோகி, ஜீவா நடித்த பொறி படங்களை இயக்கிய சுப்பிரமணியம் சிவா நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கி உள்ள படம் வெள்ளை விவசாயம் சம்பந்தப்பட்ட கதையில் இப்படம் உருவாகி உள்ளது.
சமுத்திரக்கனி, ஆத்மியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட பணிகள் அனைத்துமே பல மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்ட நிலையில் கொரோனா பிரச்சினை காரணமாக வெளியாகாமல் இருந்தது.
தற்போது தியேட்டர்கள் திறக்கப்படும் சாத்தியக் கூறுகள் இல்லாததால் படத்தை நேரடியாக டிவியில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். ஏற்கெனவே தொலைக்காட்சி உரிமம் வழங்கப்பட்டிருந்த நிறுவனத்திடமே படத்தின் வெளியீட்டு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. படத்தை முதன் முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் அந்த நிறுவனம் அதன்பிறகு அது நடத்தும் ஓடிடி தளத்தில் வெளியிடுகிறது.
ஏற்கெனவே சமுத்திரகனி நடித்த ஏலே, யோகி பாபு நடித்த மண்டேலே, விக்ரம் பிரபு நடித்த புலிக்குத்தி பாண்டி, ஜி.வி.பிரகாஷ் நடித்த வணக்கம்டா மாப்ளே படங்கள் நேரடியாக டிவியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.