ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

தமிழில் சிம்பு கதாநாயகனாக அறிமுகமான 'காதல் அழிவதில்லை' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சார்மி. அதன் பின் பல தெலுங்குப் படங்களில் நடித்து அங்கும் முன்னணி நடிகையானார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு, திரைப்படத் தயாரிப்பாளராக மாறினார்.
சார்மி செல்லமாக வளர்க்கும் நாயின் பெயர் 'ஐட்டம்'. தமிழில் 'சுல்தான்' படம் மூலம் அறிமுகமான ராஷ்மிகா மந்தானா வளர்க்கும் நாயின் பெயர் 'ஆரா'.
சார்மி அவருடைய நாயை தன்னுடைய குழந்தை என்றும், தன்னை அம்மா என்றும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு அந்த நாயின் மீது அளவிலாத அன்பு வைத்துள்ளார். அது போலவே ராஷ்மிகாவையும் 'அம்மா' எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராஷ்மிகாவும், சார்மியும் தற்போது நல்ல தோழிகளாகி விட்டார்களாம். இருவரும் அவர்களது செல்ல நாய்க்குட்டிகளுடன் சந்தித்த போது, அந்த நாய்களும் அன்பைப் பரிமாறிக் கொண்டுள்ளன.
அந்த சந்திப்பு பற்றி சார்மி, “ஆரா, ஐட்டமை சந்தித்த போது... புதிய அம்மா ராஷ்மிகாவுக்கு வாழ்த்துகள். உங்களது குழந்தை மிகவும் அபிமான தேவதையாக இருக்கிறது. உங்களை எங்களது மும்பைக்கு வரவேற்கிறோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹிந்தியில் அமிதாப்புடன் நடிக்கும் 'குட் பை' படத்திற்காக மும்பை சென்றுள்ளார் ராஷ்மிகா.