துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் | பிளாஷ்பேக்: எழுத்தாளருக்கான தேசிய விருது பெற்ற முதல் நடிகை |
ஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிப்பில் வெளியான மிருகா படத்தில் நடித்தவர் நைரா ஷா. இவர் தெலுங்கில் புர்ரா கதா மற்றும் ஹோ கயா டோட்டல் சியப்பா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் மும்பையில் உள்ள 5 நட்சத்திர ஒட்டல் ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். இந்த கொண்டாட்டத்தில் தடை செய்யப்பட்ட போதை மருந்துகள் பயன்படுத்தப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீசார் அந்த ஓட்டலில் தங்கி இருந்த நைரா ஷாவையும், அவரது காதலரையும் கைது செய்தனர். மருத்துவ பரிசோதனையில் அவர்கள் இருவரும் தடை செய்யப்பட்ட போதை பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்த இருவரும் பாந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் இருவரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். தற்போது விருந்தில் கலந்து கொண்ட நைராஷாவின் நண்பர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.