அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் | துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் |
மேற்கு வங்காளத்தில் பிறந்து வளர்ந்தவர் சுவலட்சுமி. வங்காள இயக்குநர் சத்யஜித் ரே 'உட்டோரன்' என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்தார். வயது மூப்பு காரணமாக அவரது மேற்பார்வையில் அவரது மகன் சந்திப் ராய் படத்தை இயக்கினார். சிறந்த திரைக்கதைக்கான தேசிய திரைப்பட விருதை 1994ம் ஆண்டில் இந்த படம் பெற்றது.
1995ம் ஆண்டு 'ஆசை' படத்தின் மூலம் அஜித் ஜோடியாக தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு கார்த்திக் ஜோடியாக 'கோகுலத்தில் சீதை' படத்தில் நடித்தார். இதுதவிர ‛நிலாவே வா, நீ வருவாய் என, பொன்மனம், மாயி, பொட்டு அம்மன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
2001ம் ஆண்டு 'சூலம்' என்ற பக்தி தொடரில் இரட்டை வேடத்தில் நடித்தார். அதே ஆண்டில் ஸ்வகாடோ பானர்ஜி என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து விலகினார். கணவருடன் பல நாடுகளில் வாழ்ந்த சுவலட்சுமி தற்போது சான் பிரான்சிஸ்கோவில் வசித்து வருகிறார்.
அவரை மீண்டும் நடிக்க வைக்க சில முன்னணி இயக்குனர்கள் முயன்றார்கள். குறிப்பாக 'சந்தோஷ் சுப்பிரமணியம்' படித்தில் நடிக்க இயக்குனர் மோகன்ராஜா அழைத்தபோது நடிக்க மறுத்து விட்டார். இதேபோன்று 'எம்.குமரன் சன் ஆப் மஹாலட்சுமி' படத்திலும் நடிக்க வைக்க முயற்சித்தார். அவர் மறுத்து விட்டதால் நதியா நடித்தார். இதுபோன்ற பல ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி, சான்பிரான்சிகோ பல்கலைகழகத்தில் பேராசிரியையாக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.