தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு பீஸ்ட் என்ற டைட்டில் கொடுக்கப்பட்டு நேற்று அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளிவந்தது. இதனை நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார், பூஜா ஹெக்டே ஹீரோயின். அனிருத் இசை அமைக்கிறார்.
படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்த உடனேயே இரண்டாவது லுக்கும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் பீஸ்ட் என்ற தலைப்பில் பல மொழிகளில் படங்கள் தயாராகி உள்ளன. அவைகள் அனைத்தும் பெரும்பாலும க்ரைம் த்ரில்லர் மற்றும் சைக்காலஜிக்கல் த்ரில்லர் வகை படங்கள்.
பீஸ்ட் என்றால் மிருகத்தனமானவன், மிருக குணம் என்ற பொருள் இருப்பதால் சைக்கோ த்ரில்லர், க்ரைம் த்ரில்லர் வகை படங்களுக்கு இந்த டைட்டில் வைப்பது எல்லா மொழியிலும் நடக்கிற விஷயம்.
கடந்த ஆண்டு இத்தாலியன் மொழியில் தி பீஸ்ட் என்ற படம் வெளிவந்தது. இதனை லூடுவிகோ டி மார்ட்டினோ இயக்கி இருந்தார். பெப்ரின்சோ, லினோ மவுசெல்லா நடித்திருந்தார்கள். வார்னர் பிரதர்ஸ் தயாரித்திருந்தது. இது ஆக்ஷன் த்ரில்லர் வகை படம்.
2017ம் ஆண்டு இங்கிலாந்தில் தயாரான படம் பீஸ்ட். இதனை மைக்கேல் பெர்சே இயக்கி இருந்தார், ஜெசி பக்லி, ஜானி பிளைன் நடித்திருந்தார்கள். அகிலே பிலிம்ஸ் தயாரித்திருந்தது. இது பிசியாஜிக்கல் த்ரில்லர் வகை படம்.
இதுதவிர 2019ம் ஆண்டு தி பீஸ்ட் என்ற பெயரில் ஒரு கொரியன் படம் வெளிவந்தது. இதனை லீ ஜங் ஹோ இயக்கி இருந்தார். லீ சங் மின், யோ ஜீ மயங் நடித்திருந்தார்கள். நீயூ ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்திருந்தது. இது க்ரைம் த்ரில்லர் வகை படம். 2004ம் ஆண்டு வெளிவந்த 36 குயய் டெஸ் ஆர்பவெர்ஸ் என்ற பிரஞ்சு படத்தின் ரீமேக்.
இவைகள் சில உதாரணங்கள் மட்டுமே இன்னும் நிறைய படங்கள் இருக்கிறது. டைட்டில் மட்டும் தான் காப்பியா, கதையும் காப்பியா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.