திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
தமிழ் சினிமா ஹீரோக்கள் இப்போது நேரடி தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார். அல்லது தமிழ், தெலுங்கு இரண்டுக்குமான படங்களில் நடிக்கிறார்கள். விஜய் அடுத்து வம்சி இயக்கத்திலும், தனுஷ் அடுத்து சேகர் கம்முலா இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார்கள். இருவருமே தெலுங்கில் முன்னணி இயக்குனர்கள்.
இதேபோல் தமிழ் இயக்குனர்களும் தெலுங்கை நோக்கி படையெடுக்கின்றனர். ஷங்கர் அடுத்து ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்குகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் கூட தெலுங்கில் ஒரு படம் இயக்க பேசி வருகிறார். லிங்குசாமி தெலுங்கு முன்னணி நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் தெலுங்கில் பிரபலமான கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் வில்லனாக நடிக்க வைக்க தமிழ் நடிகர்களான அருண் விஜய் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.
சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற உப்பென்னா படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். இதன் மூலம் படத்துக்கு தமிழிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த பார்முலாவில் தான் தெலுங்கு ஹீரோவுக்கு தமிழில் இருந்து வில்லன்களை இறக்க இயக்குனர்கள் திட்டமிடுகிறார்கள். ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்திலும் தமிழில் இருந்து நாயகன் ஒருவரை வில்லனாக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.