சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தமிழில் 2013ம் ஆண்டில் வெளிவந்த மூன்று பேர் மூன்று காதல் படத்தில் அறிமுகமானவர் பாலிவுட் நடிகையான சுர்வீன் சாவ்லா. அதன்பின் புதிய திருப்பங்கள், ஜெய் ஹிந்த் 2 உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும் சில ஹிந்தி, பஞ்சாபி படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரது சினிமா வாழ்க்கையில் நடிப்புக்காகப் படுக்கை (Casting Couch) என்பதை எப்படி எதிர்கொண்டார் எனச் சொல்லியிருக்கிறார்.
“நடிப்புக்காகப் படுக்கை என்பதை நான் மூன்று முறை அனுபவித்திருக்கிறேன். ஒரு முறை ஒரு இயக்குனரை சந்திக்கச் சொன்னார்கள். அவர் எனது உடலின் ஒவ்வொரு இன்ச்சையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். அதன்பின் அவர்கள் தொலைபேசியில் அழைத்தால் எடுப்பதில்லை.
அடுத்து தென்னிந்தியாவில் ஒரு தேசிய விருது பெற்ற இயக்குனர் அழைத்தார். அங்கு நீண்ட நேரம் ஆடிஷன் செய்தார்கள். எனக்கு அன்று உடல்நிலை சரியில்லை, எனவே, திரும்பிவிட்டேன். அந்த இயக்குனருக்கு தமிழைத் தவிர ஆங்கிலமோ, ஹிந்தியோ தெரியாது. அதன்பின் அந்த இயக்குனரின் உதவியாளர் என்னை மும்பைக்கு வரச் சொன்னார், ஆனால் நான் போகவேயில்லை. அந்தப் படம் இதுவரை நடக்கவேயில்லை.
ஹிந்தித் திரையுலகிலும் அப்படியான அனுபவம் உள்ளது. சமீபத்தில்தான் அது நடந்தது. ஒரு இயக்குனர், எனது க்ளீவேஜ் எப்படி இருக்கிறது எனப் பார்க்க வேண்டும் என்றார், மற்றொருவரோ எனது தொடையைப் பார்க்க வேண்டும் என்றார்,” எனக் கூறியிருக்கிறார்.
சுர்வீன் சாவ்லாவின் இந்த பேட்டிதான் தற்போது பாலிவுட் வட்டாரங்களில் வைரலாகப் போய்க் கொண்டிருக்கிறது.