போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

தென்னிந்திய அளவில் வியாபார வட்டத்தைப் பெருக்கி வைத்துள்ளவர் தமிழ் நடிகரான விஜய். தற்போது நெல்சன் இயக்கத்தில் 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் பார்வை விஜய்யின் பிறந்தநாளன்று வெளியானது. அன்றே விஜய்யின் 66வது படம் பற்றிய அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அப்படத்தைத் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படும் தயாரிப்பு நிறுவனம் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்தை மட்டும் தெரிவித்தது. படம் பற்றிய அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. இதனிடையே, அப்படத்திற்காக விஜய்யிடம் பேச்சு வார்த்தை நடந்து முடிந்துள்ளதாகவும், சம்பளமாக 100 கோடி பேசப்பட்டு அட்வான்ஸ் ஆக 10 கோடி ரூபாய் விஜய்யிடம் கொடுக்கப்பட்டு விட்டதாகம் ஒரு தகவல் டோலிவுட்டில் உலா வந்து கொண்டிருக்கிறது.
படத்தை தமிழ், தெலுங்கில் நேரடியாக எடுத்து கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து பான்-இந்தியா படமாக வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். எப்போது அறிவிப்பு வெளியிடலாம் என விஜய் பச்சைக்கொடி காட்டுகிறாரோ அப்போது வெளியாகும் என்கிறார்கள்.