மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தனது நீண்டகால காதலர் கவுதம் கிட்ச்லுவை திருமணம் செய்து கொண்ட பிறகு கதை தேர்வில் வித்தியாசம் காட்டி வருகிறார். கணவர், வேண்டாம் என்று ஒரு வார்த்தை சொன்னால் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிடுவேன் என்று காஜல் சமீபத்தில் தெரிவித்தார்.
காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு தவிர்த்து இந்தி படங்களிலும் நடித்தார். ஆனால் கோலிவுட், டோலிவுட்டை போன்று அவரால் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக முடியவில்லை. இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். உமா என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் அந்த படத்தின் அனைத்து காட்சிகளும் மேற்கு வங்கம், கோல்கட்டாவில் படமாக்கப்படவிருக்கிறது.
உமா படத்திற்காக காஜலுக்கு ரூ. 2 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. காஜல் முதல் முறையாக ரூ. 2 கோடி சம்பளம் வாங்குகிறார். முன்னதாக கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான குயின் இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான பாரீஸ் பாரீஸ் படத்தில் காஜல் நடித்தார். அவரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அந்த படம் இன்னும் ரிலீசாகவில்லை. இதையடுத்தே அவர் ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். பாரீஸ் பாரீஸ் படத்தை அடுத்து தன்னை தேடி வந்த 6 பட வாய்ப்புகளை ஏற்க மறுத்தார். அவை அனைத்துமே ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள்.
காஜல் தற்போது சிரஞ்சீவியுடன் சேர்ந்து ஆச்சார்யா தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். மேலும் நாகர்ஜுனா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். அவர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடித்து வந்த இந்தியன் 2 பட வேலை பாதியில் நிற்கிறது. இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் எப்பொழுது துவங்கும் என்று தெரியவில்லை. இந்நிலையில் பாதையை மாற்றி கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.