தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமிழ் சினிமா உலகில் அடுத்து வெளியாக உள்ள படங்களில் அதிக எதிர்பார்ப்புகளை 'அண்ணாத்த, பீஸ்ட், வலிமை' ஆகிய படங்கள் ஏற்படுத்தி உள்ளன. இவற்றில் ரஜினிகாந்த் நடிக்கும் 'அண்ணாத்த' படம் இந்த வருட தீபாவளி தினமான நவம்பர் 4ம் தேதி வெளியாகும் என்று மீண்டும் உறுதி செய்துவிட்டார்கள். விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நேற்று முதல் தான் ஆரம்பமாகி உள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு தான் வெளிவரும்.
அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்திற்காக இன்னும் ஒரு முக்கியமான சண்டைக்காட்சியை படமாக்க வேண்டியுள்ளதாம். இதற்கான படப்பிடிப்பு விரைவில் ஐதராபாத்தில் நடக்கும் எனச் சொல்கிறார்கள். அது முடிந்தாலும் படத்தை அடுத்த மாதம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிட வாய்ப்பில்லை. மிகக் குறுகிய நாட்களே உள்ளது.
எனவே, படத்தை அதற்கடுத்து வரும் பண்டிகை நாட்களில் ஒன்றில்தான் வெளியிட வேண்டியிருக்கும். அப்படிப் பார்த்தால் செப்டம்பர் 10ம் தேதி வினாயகர் சதுர்த்தி தினமும், அக்டோபர் 14 ஆயுத பூஜை தினமும் வர உள்ளது. அந்த இரண்டு நாட்களில் ஏதாவது ஒரு நாள் படத்தை வெளியிடப் பொருத்தமான நாளாக இருக்கும். தீபாவளி வரை 'வலிமை' படத்தின் வெளியீட்டை தள்ளி வைக்க மாட்டார்கள் என்றும் கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
'வலிமை' அப்டேட் வெளிவரும் போது படத்தின் வெளியீட்டுத் தேதிக்கான அறிவிப்பும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.