மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் சார்பட்டா பரம்பரை. வடசென்னை பாக்சர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்திற்காக பாக்சிங் கற்றுக் கொண்டதோடு தனது கடுமையான உடற்பயிற்சிகள் செய்து தனது உடல்கட்டையும் மாற்றி இந்த படத்தில் நடித்துள்ளார் ஆர்யா. அந்த வகையில் இந்த படத்திற்காக இதுவரையில்லாத அளவுக்கு அதிகப்படியான உழைப்பை கொட்டியுள்ளார் ஆர்யா. கே 9 ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
இப்படத்தின் அனைத்துக்கட்ட பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகிவிட்ட நிலையில் தியேட்டரில் தான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா அலை காரணமாக ஓடிடியில் இப்படம் விரைவில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆர்யாவுடன் துஷாரா, கலையரசன், பசுபதி, ஜான் விஜய், காளி வெங்கட் என பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, அன்பறிவு ஸ்டன்ட் அமைத்துள்ளனர்.