முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் | பேவரைட் ஆஸ்திரேலிய நடிகையுடன் புத்தாண்டை கொண்டாடிய நதியா | நான் ஹிந்தியில் படம் இயக்கினால் இவர்தான் ஹீரோ : வினோத் |

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில் வெளியான படம் அசுரன். மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படம் தனுசுக்கு தேசிய விருதினை பெற்றுக் கொடுத்தது. இந்நிலையில் தற்போது இப்படம் நாரப்பா என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக்காகியுள்ளது. வெங்கடேஷ், பிரியாமணி நடித்துள்ளனர். தற்போது கொரோனா தொற்று காலம் என்பதால் நாரப்பாவை ஓடிடியில் வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது. ஆனால் இதற்கு வெங்கடேஷ் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆந்திராவிலுள்ள ஒரு ரசிகை நாரப்பாவை ஓடிடியில் வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது கையில் பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இந்த சம்பவம் தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.