தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, திருமணத்துக்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்', 'சகுந்தலம்' போன்ற படங்கள் உள்ளன.
பேமிலி மேன் வெப் தொடர் இரண்டாம் பாகத்தின் மூலம் ஓடிடியிலும் தடம் பதித்து வெற்றி பெற்றுள்ளார். ஊரடங்கு என்பதால் சமந்தா குடும்பத்துடன் நேரம் செலவிடுவது, உடற்பயிற்சி செய்வது உள்ளிட்ட பலவற்றிலும் கவனம் செலுத்தி வருகின்றார். சமந்தா அடிக்கடி போட்டோஷூட் எடுத்து படங்களை பகிர்வார். கவர்ச்சி படங்களால் பரபரப்பையும் ஏற்படுத்துவார். தற்போது வெள்ளை நிற உடையில் சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அதில் சமந்தா அன்னப்பறவை போல் இருக்கிறார். இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள சமந்தா "வாழ்க்கையில் நீங்கள் கடந்து வந்த எல்லாவற்றையும் பற்றி யோசித்துப் பாருங்கள். முதலில் இதை நம்மால் இதை செய்யமுடியாது என்று தோன்றியது... ஆனால் தற்போது நீங்கள் அடைந்த உயரத்தைப் பாருங்கள்... நாம் போராளிகள்!" என்றும் தெரிவித்துள்ளார்.