ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் சமூகவலைதளத்தில் தாங்கள் சென்ற பயணம், விடுமுறைக் கொண்டாட்டம் ஆகியவற்றின் போது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.
அந்தவகையில், சமீபத்தில் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன், நடிகை நயன்தாரா, கேரளாவிற்கு தனி விமானத்தில் சென்றார். விமான பயணத்தின் போது எடுத்த வீடியோவையும், புகைப்படத்தையும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார்.
இந்த பயணம் நயன்தாரா தந்தையின் உடல்நலனையும் சேர்த்து ஒரு செய்தி உலவுகிறது. இதனால் தான் அவசரமாக தனிவிமானம் மூலம் நயன்தாரா கொச்சி சென்றது கூட தந்தையின் உடல்நலம் குன்றியதால் தான் என்றும் கூறப்படுகிறது.
நயன்தாராவின் அப்பா, மகளைத் திருமணக் கோலத்தில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதுகுறித்து பலமுறை அவரிடம் பேசியும் நயன்தாரா சாதகமான முடிவு எதையும் கூறவில்லையாம். ஆனால் தற்போது தந்தையின் ஆசையை நிறைவேற்ற திருமணத்துக்கு ஒப்புக் கொண்டு விட்டார் என்கிறார்கள்.