சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகிவரும் படம் 'வலிமை'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்துவிட்டது. இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கிறது. வெளிநாட்டில் படப்பிடிப்பு எடுக்க வேண்டும் என்பதால் கொரோனா ஊரடங்கு முடியட்டும் என்று காத்திருந்தனர். ஆனால், மூன்றாவது அலை வரும் என்ற ஆபத்து இருப்பதால் வெளிநாடு ஷூட்டிங் சாத்தியம் இல்லை. எனவே ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பை முடித்துவிட இருக்கிறார்கள்.
விரைவில் தொடங்க இருக்கும் இந்த ஷூட்டிங்கில் அஜித் கலந்து கொள்ள இருக்கிறார். ஒரு வாரத்துக்கு மேல் அங்கு படப்பிடிப்பு நடக்கும் என்று சொல்லப்படுகிறது. இங்கு எடுக்கப்படும் காட்சிகளை ஐரோப்பாவில் நடப்பது போல் இணைக்க திட்டமாம். எனவே அவுட்டோர் லொக்கேஷன் காட்சியைப் படமாக்க மட்டும் படக்குழுவின் சிலர் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று வர இருக்கிறார்கள்.