சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆன்ட்ரியா. இன்றைய நடிகைகளில் நடிப்பதுடன் நல்ல குரல் வளத்துடன் பாடும் பாடகியாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் அவ்வப்போது சுவாரசியமான சில விஷயங்களை, தகவல்களைப் பகிர்வதை வழக்கமாக வைத்திருப்பவர் ஆன்ட்ரியா. அந்த விதத்தில் நேற்று அவர் தன்னுடைய கல்லூரி கால புகைப்படத்தைப் பகிர்ந்து தன்னுடைய ஆசையைப் பற்றி பதிவிட்டிருக்கிறார்.
“நான் கல்லூரி மாணவியாக இருந்த போது, வளர்ந்த பெண்ணாக மாற வேண்டும் என ஆசைப்பட்டேன். இப்போது நான் ஒரு வளர்ந்த பெண், ஆனாலும், சுதந்திரமான கல்லூரி மாணவியாக மீண்டும் கல்லூரிக்குப் போக விரும்புகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இரு தினங்களுக்கு முன்பு சுடிதார் அணிந்த ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார் ஆன்ட்ரியா. அந்தப் புகைப்படத்தில் அவரைப் பார்க்க கல்லூரி மாணவி போலவே இருந்தார். அதனால்தான் தன்னுடைய கல்லூரிக் கால நினைவுகள் வந்து பழைய புகைப்படங்களைத் தேடி எடுத்து நேற்று பதிவிட்டுள்ளார் போலிருக்கிறது.