210 கோடியை அள்ளிய ஆன்மிகப்படம் | 'சன்னிதானம்(P.O)' : சேரன், மஞ்சுவாரியர் வெளியிட்ட யோகிபாபு பட போஸ்டர் | ஒரே இரவில் இரண்டு விருதுகள்: மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | ‛தி இன்டர்ன்' பட ரீமேக்கில் இருந்து விலகிய தீபிகா படுகோனே | விக்ரம் 65வது படத்தை இயக்கும் ‛பார்க்கிங்' இயக்குனர் | நாகார்ஜுனா Vs ஜுனியர் என்டிஆர் - கூடுதல் பலத்தைக் கொடுக்கப் போவது யார் ? | சீக்கிரம் சசி உடன் மீண்டும் ஒரு படம் : விஜய் ஆண்டனி | இப்பவே கூலி ரூ.200 கோடி லாபமா...? | சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக பரத் தேர்வு | இரண்டாவது வாரத்தில் தெலுங்கு திரையுலக ஊழியர்கள் ஸ்டிரைக் |
கேரளாவை சேர்ந்த பிரஜன் தமிழ் தொடர்களில் நடித்து புகழ் பெற்றார். பெண், அஞ்சலி, இது ஒரு காதல் கதை, காதலிக்க நேரமில்லை, கோகுலத்தில் சீதை, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, சின்னதம்பி, அன்புடன் குஷி உள்பட பல தொடர்களில் நடித்தார்.
ஆனாலும் பிரஜனுக்கு சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்பது தான் கனவு. இடையிடையில் சில படங்களில் நடித்தாலும் சினிமாவில் அவர் நினைத்த இடத்தை பிடிக்க முடியவில்லை. பழைய வண்ணாரப்பேட்டை, மணல் நகரம் அவர் நடித்த படங்களில் முக்கியமானது. கடைசியாக மலையாளத்தில் வெளிவந்த லவ் ஆக்ஷன் டிராமா படத்தில் நடித்திருந்தார்.
இப்போது தமிழில் மீண்டும் ஹீரோவாகிறார். சிலந்தி படத்தை இயக்கிய ஆதிராஜன் இயக்கும் நினைவெல்லாம் நீயடா படத்தில் பிரஜன் தான் ஹீரோ. அவருடன் மதுமிதா, காளி வெங்கட், மயில்சாமி, கேப்ரில்லா, சினாமிகா உள்பட பலர் நடிக்கிறார்கள். ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது.
"இது ஒரு காதல் கதை. இளையராஜாவின் இசையால் அந்த காதல் வழியப்போகிறது. சென்னை, புதுச்சேரி, மதுரை, கூர்க் பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது" என்கிறார் இயக்குனர் ஆதிராஜன்.