தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
2014ல் ஹிந்தியில் கங்கனா ரணவத் நடிப்பில் வெளியாகி நல்ல விமர்சனங்களையும், வசூலையும் பெற்ற படம் குயின். அப்படத்தைத் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் ஒரே சமயத்தில் ரீமேக் செய்தார்கள்.
தமிழில் நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்க, காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க, 2017ல் படத்தை ஆரம்பித்தார்கள். அது போலவே மற்ற மொழிகளிலும் படப்பிடிப்பு ஆரம்பமானது. 2018 ஜுன் மாதத்தில் நான்கு மொழிகளிலும் படப்பிடிப்பு முடிவடைந்தது. டிசம்பர் மாதத்தில் படத்தின் டீசரை வெளியிட்டார்கள். தமிழ் டீசர் இதுவரையிலும் 10 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
ஹிந்தியில் பெரும் வெற்றியைப் பெற்ற ஒரு படத்தை ஒரே நேரத்தில் தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்து கடந்த மூன்று வருடங்களாக படம் வெளியாகாமல் இருப்பது ஆச்சரியமான ஒன்று. சென்சார் சிக்கல்தான் முக்கியக் காரணம் என்கிறார்கள். ஹிந்தியில் சென்சார் கொடுக்கப்பட்டு எப்போதே வெளியான படத்தை வேற்று மொழிகளில் ரீமேக் செய்த போது எங்கிருந்து சென்சார் பிரச்சினை வந்தது என்று தெரியவில்லை.
இந்தப் படம் பற்றி சமீபத்தில் படத்தின் நாயகி காஜலிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, “பாரிஸ் பாரிஸ் படம் எப்போது வரும் என்று எனக்கும் கூடத் தெரியாது,” என்று தெரிவித்துள்ளார்.
முடங்கியிருக்கும் படங்களுக்கு இப்போது ஓடிடி தான் விடிவுகாலமாக இருக்கிறது. அப்படியாவது பாரிஸ் பாரிஸ் ரசிகர்களின் பார்வைக்கு வருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.