ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் |
2005ல் கன்னடத்தில் தான் இயக்கிய ஆப்தமித்ரா என்ற படத்தை தமிழில் ரஜினியை வைத்து சந்திரமுகி என்ற பெயரில் ரீமேக் செய்தார் பி.வாசு. அவருடன் பிரபு, ஜோதிகா, வடிவேலு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்த அப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், சந்திரமுகி-2 படத்தை ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி.வாசு இயக்கப்போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. சந்திரமுகியில் ரஜினி நடித்த வேட்டையன் வேடத்தை மையப்படுத்தி இரண்டாவது பாகம் உருவாகப்போவதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது ருத்ரன் என்ற படத்தில் நடித்துள்ள லாரன்ஸ், அடுத்தபடியாக வெற்றிமாறன் கதையில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்கிறார்.
இதனால் சந்திரமுகி-2 உருவாக வாய்ப்பில்லையா? என்கிற சந்தேக கேள்விகள் எழுந்தன. இந்தநிலையில் தற்போது அதற்கு விடை கொடுக்கும் வகையில், 2022ஆம் ஆண்டில் சந்திரமுகி-2 படம் தொடங்கப்பட இருப்பதாக கோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அதனால் தற்போது நடித்து வரும் படங்களை முடித்து விட்டு வேட்டையனாக லாரன்ஸ் களமிறங்குவார் என்பது தெரியவந்துள்ளது.