சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் |

நடிகர் சூர்யா இன்று தன்னுடைய 47வது பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துகளைச் சொல்லி வருகிறார்கள். சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய படங்களின் அப்டேட்டுகள் கடந்த ஒரு வாரமாகவே வந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரம் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள 'வாடிவாசல்' படத்தின் டைட்டில் பார்வையை வெளியிட்டார்கள்.
நேற்று சூர்யாவின் 40வது படமாக அழைக்கப்பட்டு வந்த படத்தின் தலைப்பாக'எதற்கும் துணிந்தவன்' என்பதை அறிவித்தார்கள். இப்படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார்.
இன்று மாலை சூர்யாவின் 39வது படத்தின் முதல் பார்வையை வெளியிட உள்ளார்கள். பொதுவாக வரிசையாகத்தான் படங்களின் அறிவிப்புகள் வெளியாகும். ஆனால், சூர்யா கடந்த சில வருடங்களில் சிவா இயக்கத்தில் நடிக்க வேண்டிய படம், ஹரி இயக்கத்தில் அறிவிக்கப்பட்ட படம் ஆகியவற்றால் அவர்களது படங்களின் வரிசையில் குழப்பம் நீடித்தது.
எனவே தான் 40வது படத்தின் அறிவிப்புக்குப் பிறகு 39வது படத்தின் அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது. இப்படத்தை த.செ.ஞானவேல் இயக்குகிறார். ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், லிஜோமோள் ஜோஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
சூர்யாவின் 40வது படம் 'எதற்கும் துணிந்தவன்', 41வது படம் 'வாடிவாசல்'. இவற்றிற்கு அடுத்து சிவா இயக்கத்தில் 42வது படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது. ஹரி - சூர்யா இணைவதாக அறிவிக்கப்பட்ட 'அருவா' படம் நடக்க வாய்ப்பில்லை என்றே சொல்கிறார்கள்.