மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா நடித்துள்ள படம் எனிமி. அவன் இவன் படத்திற்கு பிறகு அவர்கள் இருவரும் இணைந்துள்ள இந்த படத்தில் விஷால் நாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர். மிருணாளினி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அதில் செப்டம்பர் மாதம் படம் திரைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் டீசர் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஒரேநாளில் 55 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை இந்த டீசர் பெற்றுள்ளது. அதிரடியான ஆக்சன் கதையில் உருவாகியிருக்கும் இந்த டீசரில், ‛‛உலகிலேயே மிகவும் ஆபத்தானவன் யாருன்னா, உன்னைப் பற்றி எல்லாமேதெரிந்த உன்னோட நண்பன்தான்'' என்று இடம் பெற்றுள்ள வசனம் எனிமி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.