திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் கூட்டணியில் உருவாகி வரும் படம் விக்ரம்.. சில நாட்களுக்கு முன் மீண்டும் துவங்கிய இந்தப்படத்தின் படப்பிடிப்பில் விஜய் சேதுபதியை தொடர்ந்து, தற்போது பஹத் பாசிலும் கலந்துகொண்டு நடித்து வருகிறார்.
சமீபத்தில் தான் பஹத் பாசில் நடித்த மாலிக் திரைப்படம் ஒடிடி தளத்தில் வெளியானது. இந்தநிலையில் கமல், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட விக்ரம் படக்குழுவினர் சிலர் படப்பிடிப்பு முடிந்தபின்னர் மாலிக் படத்தை பார்த்து ரசித்துள்ளனர்.
இந்தப்படத்தை இயக்கிய மகேஷ் நாராயணன், கமலின் விஸ்வரூபம் படத்திற்கு படத்தொகுப்பாளராக பணியாற்றியவர். அந்த நட்பின் அடிப்படையில் கமலுக்காக இந்தப்படத்தை சிறப்பு திரையிடல் செய்து திரையிட்டு காட்டிய மகேஷ் நாராயணன், கமல், லோகேஷ் கனகராஜ், பஹத் பாசில் ஆகியோருடன் அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் சோஷியல் மீடியாவில்,வெளியிட்டுள்ளார்.