கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! | கூலி படத்தை பார்த்துவிட்டு உதயநிதி, லதா ரஜினி வெளியிட்ட தகவல்! | பருத்திவீரன் சரவணன் நடிக்கும் போலீஸ் பேமிலி | ‛பாகுபலி' நாயகன் பிரபாஸுக்கு விரைவில் திருமணம்! | 'கூலி' படத்தின் வியாபாரம் : கோலிவுட் வட்டாரத் தகவல் | இன்று 92வது பிறந்தநாள் கொண்டாடுகிறார் பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா |
மலையாளத்தில் தொண்ணூறுகளில் ஹீரோவாகவும் தற்போது குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருபவர் நடிகர் முகேஷ். கேரளாவின் சட்டசபை உறுப்பினராகவும் இருக்கிறார். தமிழில் ஜாதிமல்லி, ஐந்தாம்படை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் நடிகர் சரிதாவின் கணவர் என்கிற வகையில் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் ஓரளவு பிரபலமானவர். கடந்த 1988ல் சரிதாவை திருமணம் செய்து கொண்ட முகேஷ் 2011ல் அவரை விவாகரத்து செய்தார்.
அதன்பின் 2013ல் மெத்தில் தேவிகா என்கிற நாடக நடிகையை மறுமணம் செய்து கொண்டார். தற்போது எட்டு வருடங்கள் ஆன நிலையில் முகேஷிடம் இருந்து விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளார் மெத்தில் தேவிகா. சமீபத்திய பேட்டி ஒன்றில் இதை உறுதிப்படுத்தியும் உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “திருமணமாகி எட்டு வருடங்களாகியும் கூட என்னால் அவரை புரிந்து கொள்ளவே முடியவில்லை. திரையுலக மற்றும் அரசியல் நிகழ்வுகளை வீட்டிலும் பிரதிபலிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.. ஆனால் பல வருடங்களாக அதுதான் தொடர்கிறது. இனியும் அவருடன் தொடர்ந்து வாழ முடியாது என்பதால் தான் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளேன். அதேசமயம் அவரது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் எண்ணமும் இல்லை. அதனால் குடும்ப வன்முறை என்றெல்லாம் காரணம் சொல்லாமல், பரஸ்பரம் ஒப்புக் கொண்டு பிரிவதாக விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளேன்” என கூறியுள்ளார் மெத்தில் தேவிகா.