சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

பிரபல சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த். நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த வேணு, முத்து எங்கள் சொத்து படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தார். அதன்பிறகு அந்த ஒரு நிமிடம், படிக்காத பண்ணையார், அலைபாயுதே, நரசிம்மா, வல்லவன், வேகம் உள்பட பல படங்களில் நடித்தார். சபாஷ் சரியான போட்டி என்ற படத்தை இயக்கினார்.
சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் சின்னத்திரை பக்கம் வந்தார். அலைகள், ஆடுகிறான் கண்ணன், காசளவு நேசம், காஸ்ட்லி மாப்பிள்ளை, கிரீன் சிக்னல், ரிஷிமூலம், வாழ்க்கை உள்பட 20க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்தார். கடைசியாக ராதிகாவின் சந்திரகுமாரியில் நடித்தார். ராதிகாவின் வாணி ராணி சீரியலில் அவரின் கணவராக நடித்திருந்தார்.
வேணு அரவிந்துக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அதற்கான சிகிச்சை பெற்று குணமடைந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு பரிசோதனை செய்து பார்த்ததில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு மூளையில் கட்டி இருப்பது தெரிய வந்தது. உடனே அறுவை சிகிச்சை செய்து கட்டி அகற்றப்பட்டது.
அதன்பிறகு எதிர்பாராத வகையில் அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. டாக்டர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர் விரைவில் குணமாகி வர வேண்டும் என திரையுலகினரும், ரசிகர்களும் கடவுளிடன் வேண்டி வருகின்றனர்