அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் | கேரளாவில் ஜனநாயகன் முதல் நாள் முதல் காட்சி 6 மணிக்கு தான் | ஷாருக்கானின் பதான் பட வசூலை முறியடிக்கும் துரந்தர் | 2026ல் ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் நிவின் பாலி, மமிதா பைஜூ படம் | மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா | சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா | விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? |

பிக்பாஸில் பங்கேற்ற தர்ஷன் - லாஸ்லியா இணைந்து நடிக்கும் கூகுள் குட்டப்பா படத்தின் முதல் போஸ்டரை சூர்யா வெளியிட்டார். இரட்டை இயக்குனர்கள் சபரிகிரீசன் மற்றும் குரு சரவணன் இயக்குகின்றனர். தெனாலி படத்தை அடுத்து, இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், 20 ஆண்டுகளுக்கு பின் தயாரிக்கும் படம் இது. மேலும், முக்கிய பாத்திரத்திலும் நடிக்கிறார். யோகிபாபு, பூவையர், மனோபாலா, மாரிமுத்து, 'பிளாக்' பாண்டி, 'பிராங்க் ஸ்டார்' ராகுல், நடிகை பவித்ரா லோகேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
மலையாளத்தில் வெளியாகி வெற்றிப்பெற்ற ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தை தமிழில் கூகுள் குட்டப்பனாக தமிழுக்கு ஏற்றபடி சில காட்சிகளை சேர்த்து உருவாக்கியுள்ளனர். ரோபோ ஒன்றும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளது.




