மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா | சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா | விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' | அறிமுகப் படத்திலேயே 1000 கோடி, அதிர்ஷ்ட ஹீரோயினாக மாறிய சாரா |

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சூரரைப்போற்று படம் ஓ.டி.டியில் ரிலீசானது. தியேட்டர்களில் வெளியானால் எந்த அளவுக்கு வரவேற்பு பெறுமோ அந்த அளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றியும் பெற்றது. இந்த படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதையும் சுதாவே இயக்குவதாக சூர்யாவின் 2டி நிறுவனம் அறிவித்தது
இந்த நிலையில் தமிழில் சூரரைப்போற்று படத்தை சூர்யாவின் 2டி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த சிக்யா என்டர்டைன்மென்ட் நிறுவனத்தைச் சேர்ந்த குநீத் மொங்கா என்பவர் ஹிந்தி ரீமேக் ரைட்ஸை விற்றதில் ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தின்படி தன்னுடன் கலந்தாலோசிக்காமல் சூர்யா தன்னிச்சையாக செயல்பட்டுள்ளார் எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் சூரரைப்போற்று இந்தி ரீமேக்கிற்கு தற்காலிகமாக தடை விதித்து உள்ளது. மேலும் இரு தரப்பினரும் நட்பு ரீதியாக சுமுகமாகப் பேசி இந்த விஷயத்தில் ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
2டி சார்பில் விளக்கம்
இதுகுறித்து 2டி நிறுவனத்தின் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் அளித்துள்ள விளக்கத்தில், ‛‛கேப்டன் கோபிநாத் அவர்களிடம் இருந்து படத்துக்கான உரிமையை பெற்று தந்ததற்கு உண்டான பணத்தை சிக்யா நிறுவனத்திற்கு பேசியபடி வழங்கப்பட்டுவிட்டது. "கோபிநாத் அவர்களுக்கு தந்த பணத்தை தவிர, சிக்யா எண்டர்டெய்ன்மென்டிற்கு ரூ 3 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் சிக்யா நிறுவனம் தொடர்ந்த இந்த வழக்க்கில் எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. எந்த ஒரு அடிப்படையும் இன்றி பட வேலைகளை தாமதப்படுத்தவும், அதிகமாக பணம் பெறும் நோக்கத்துடனும் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர். எங்கள் தரப்பின் நியாயங்களை நிரூபிக்க தேவையான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன'' என்றார்.