செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
அழகன் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மதுபாலா. இதில் மம்முட்டி, பானுப்ரியா மற்றும் கீதா ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தார். இதையடுத்து 1992-ஆம் ஆண்டில் வெளியான மணிரத்தினத்தின் “ரோஜா” படம் மதுபாலாவை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சென்றது. பின்னர் இயக்குநர் ஷங்கரின் 'ஜெண்டில்மேன்' படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்தார். இதையடுத்து தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் என வாய்ப்புகள் குவிந்தன.
பின்னர் 1999-ஆம் ஆண்டு மதுபாலாவுக்கு திருமணம் நடந்தது. இவர் நடிகை ஹேமமாலினியின் உறவினரான ஆனந்த ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது அமேயா, கீயா என இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.மதுபாலா தனது மகள்களுடன் இருக்கும் படத்தை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் மகள் நடிக்க வரும் அளவுக்கு வளர்ந்தும் இளமையான அம்மாவாகவே இருக்கிறீர்கள் என்று கமெண்ட் போட்டு வருகின்றனர்.