2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

சோசியல் மீடியாவில் நெகடிவ் கருத்துக்களை வெளியிட்டு பப்ளிசிட்டி தேடிக்கொண்டு வருபவர் நடிகை மீராமிதுன். பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த உடனேயே சர்ச்சை வீடியோக்களை வெளியிடத் தொடங்கிய மீராமிதுன், அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடன் பங்கேற்றிருந்த டைரக்டர் சேரனைப்பற்றி தவறான கருத்துக்களை வெளியிட்டார். அதன்பிறகு விஜய், சூர்யா போன்ற நடிகர்களின் மனைவிகளைப்பற்றி தவறான கருத்துக்களை வெளியிட்டு அவர்களது ரசிகர்களிடம் நன்றாக வாங்கிக்கட்டிக்கொண்டார். அப்போது டைரக்டர் பாரதிராஜா உள்ளிட்டோரும் மீராமிதுனுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தற்போது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மக்களைப் பற்றி அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தாழ்த்தப்பட்ட மக்கள் மோசமான குற்றச்செயல்களில் அதிகமாக ஈடுபடுகிறார்கள். திரையுலகில் இருக்கும் தாழ்த்தப்பட்ட இயக்குனர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள்தான் எல்லா தவறான வேலைகளையும் செய்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள். தாழ்த்தப்பட்ட இயக்குனர்களுக்கு மற்றவர்கள் ஏன் உதவி செய்கிறார்கள் என்று தெரியவில்லை என அந்த வீடியோவில் ஒரு சமூகத்தைப் பற்றி தவறான கருத்து வெளியிட்டுள்ளார் மீரா மிதுன். சோசியல் மீடியாவில் இந்த வீடியோ வைரலாகி வருவதை அடுத்து அவரை நோக்கி கண்டன குரல்களும் பாய்ந்து கொண்டிருக்கிறது.