டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

தமிழ் நடிகர் விஜய், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி இருவரின் சந்திப்பு தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பான பேச்சாக உள்ளது. தோனியை தமிழ் ரசிகர்கள் 'தல' என்றும், விஜய்யை அவரது ரசிகர்கள் 'தளபதி' என்றும் குறிப்பிடுவார்கள். இருவரது ரசிகர்களும் அந்தப் புகைப்படங்களை ஷேர் செய்து பல்வேறு விதமான கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள். இது மீண்டும் விஜய், அஜித் ரசிகர்ளிடையே மோதலை ஏற்படுத்திவிட்டது.
'தல தளபதி' என டுவிட்டரில் டிரெண்டிங் இந்திய அளவில் போய்க் கொண்டிருக்க, பதிலுக்கு அஜித் ரசிகர்கள் 'ஒரே தல அஜித்' என்று போட்டியாக டிரெண்டிங் செய்து கொண்டிருக்கிறார்கள். அஜித்தை அவரது ரசிகர்கள் 'தல' என்று தான் அழைப்பார்கள். இன்று தோனியை அப்படி குறிப்பிடுவதால் அஜித் ரசிகர்கள் கோபமடைந்து 'ஒரே தல அஜித்'தை டிரெண்ட் செய்து வருகிறார்கள்.
இதனிடையே, 'பீஸ்ட்' படத்தின் இயக்குனர் நெல்சன், தோனி, விஜய் ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, “பீஸ்ட், லயன்' டபுள் பீஸ்ட் மோட்” என டுவீட் செய்து ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார்.