சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா, அஜ்மல், மணிகண்டன் மற்றும் பலர் நடித்துள்ள 'நெற்றிக்கண்' படம் நாளை(ஆக.,13) ஓடிடியில் வெளியாகிறது. நயன்தாரா நடித்து இதற்கு முன்பு வெளியான 'மூக்குத்தி அம்மன்' படமும் ஓடிடி தளத்தில்தான் வெளியானது. அப்படத்தின் விளம்பரங்களில் நயன்தாரா புறக்கணிக்கப்பட்டாலும் அவருக்காக அப்படத்தைப் பார்த்தவர்கள் அதிகம்.
ஓடிடி மூலம் மக்களிடம் நேரடியாகச் செல்ல முடிகிறது என்பதைப் புரிந்து கொண்டதால் தான் 'மூக்குத்தி அம்மன்' புறக்கணிப்பு விஷயத்தை மனதில் வைத்துக் கொண்டு 'நெற்றிக்கண்' படத்திற்காக டிவி பேட்டி வரை நயன்தாரா சென்றிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
இப்படத்தில் நயன்தாரா கண்பார்வையற்றவராக நடித்துள்ளார். 2011ல் வெளிவந்த கொரியன் படமான 'பிளைன்ட்' படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்தான் இந்தப் படம்.
டிரைலரைப் பார்த்த போது மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவந்த, 'சைக்கோ' படம் போலவே இருந்தது. இருந்தாலும், நயன்தாரா நடிப்பதால் 'நெற்றிக்கண்' படத்திற்கு தனி வரவேற்பு இருக்க வாய்ப்புள்ளது.
தனது முந்தைய வெளியீடான 'மூக்குத்தி அம்மன்' போலவே ஓடிடியிலும் 'நெற்றிக்கண்' படத்தையும் ஹிட் கொடுப்பாரா நயன்தாரா என்பது நாளை தெரிந்துவிடும்.