விமர்சனங்களில் பின்னடைவைச் சந்திக்கும் 'வார் 2' | அமெரிக்காவில் 4 மில்லியன் வசூலை நெருங்கும் 'கூலி' | 50 ஆண்டுகள்... தமிழ் சினிமாவின் 'ராஜா' ரஜினிகாந்த் | இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு |
சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் சபீர் கலரக்கல். இதற்கு முன்பு பேட்ட, டெடி, அடங்கமறு உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் சபீர் நடித்துள்ளார். சார்பட்டா பரம்பரை திரைப்படத்திற்காக சபீர் தனது உடலை வெறித்தனமாகக் குறைத்து அசல் பாக்சிங் வீரர் போல நடித்து அனைவரையும் அதிர வைத்தார். டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த சபீர், விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தில் இடம் பெற்ற பாடலான வாத்தி கம்மிங் பாடலுக்கு சூப்பராக டான்ஸ் ஆடியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சபீர் அடுத்து விஜய் நடிப்பில் உருவாகும் பீஸ்ட் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார்.