‛அபூர்வ ராகங்கள்' தந்த ‛அபூர்வ' மனிதர் ரஜினி : 50 ஆண்டுகளை கடந்தும் நிற்கும் 'அதிசய' நாயகன் | 33 ஆண்டுகளை நிறைவு செய்த ஏஆர் ரஹ்மான் | விமர்சனங்களில் பின்னடைவைச் சந்திக்கும் 'வார் 2' | அமெரிக்காவில் 4 மில்லியன் வசூலை நெருங்கும் 'கூலி' | 50 ஆண்டுகள்... தமிழ் சினிமாவின் 'ராஜா' ரஜினிகாந்த் | இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! |
சின்னத்திரையில் அசத்திய சிறுவன் அஸ்வந்த், தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் விஜய்சேதுபதியின் மகன் ராசுகுட்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். படத்தில் இவரது நடிப்புக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. சமீபத்தில் தனுஷ் நடித்த 'ஜகமே தந்திரம்' உட்பட ஒரு சில படங்களில் அஸ்வந்த் நடித்துள்ளார்.
இந்நிலையில் அஸ்வந்த் தாயாருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அடுத்து தனக்கு தம்பி பாப்பா பிறந்திருக்கிறான் என்று மிகவும் மகிழ்ச்சியுடன் தனது சமூக வலைத்தளத்தில் அஸ்வந்த் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது தம்பியுடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.