விஜயை விமர்சித்த நடிகையின் அனலி பட ரிசல்ட்? | சூரி படத்தின் பட்ஜெட் 75 கோடியா? | பத்து கோடியை தொட்ட சிறை | ஜனநாயகன் டிக்கெட் புக்கிங் எப்போது தெரியுமா? | ரஜினியை இயக்கும் ‛டான்' இயக்குனர் : 2027 பொங்கலுக்கு ரிலீஸ் | 'ஜனநாயகன்' டிரைலர் : எதிர்பார்ப்புகள் என்ன ? | தமிழில் முதல் வெற்றியைப் பெறுவாரா பூஜா ஹெக்டே ? | இன்று ஒரே நாளில் மூன்று முக்கிய வெளியீடுகள் | சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் |

கடந்த ஆண்டு அறிமுக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரித்து வர்மா ஆகியோர் நடிப்பில் வெளியான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் தேசிங்கு பெரியசாமியை போனில் அழைத்து பாராட்டிய ஆடியோ இணையத்தில் வைரலாகப் பரவியது. மேலும் தனக்காகவும் ஒரு கதை தயார் செய்யுமாறு அந்த போன் காலில் கூறியதும் குறிப்பிடத்தக்கது. தற்போது தேசிங்கு பெரியசாமி ரஜினிகாந்திடம் ஒரு கதையைக் கூறியுள்ளார் என்கிறார்கள்.
இந்நிலையில் தேசிங்கு பெரியசாமி விஜய்யிடம் ஒரு படத்தின் கதையை கூறவே அது அவருக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். எனவே ரஜினியை அடுத்து அவர் விஜயுடன் கூட்டணி அமைக்க அதிகம் வாய்ப்பிருப்பதாகவும் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைக்கும் படம் தள்ளி வைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.