ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
எஸ்.ஆர் பிலிம் பேக்டரி சார்பில் தமிழ் ராஜ் தயாரித்திருக்கும் படம் மெய்ப்பட செய். ஆதவ் பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மதுனிகா அறிமுகமாகிறார். மற்றும் ராஜ்கபூர், ஆடுகளம் ஜெயபால், ஓ. ஏ.கே.சுந்தர், பெஞ்சமின் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தயாரிப்பாளர் தமிழ் ராஜ் நடித்துள்ளார். ஆர்.வேல் ஒளிப்பதிவு செய்துள்ளார், பரணி இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் வேலன் கூறியதாவது: உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் இருந்து பரவ ஆரம்பித்து இன்று அனைத்து நாடுகளிலும், மூலை முடுக்குகளில் எல்லாம் பரவி கிடக்கிறது கொரொனா என்னும் கொடிய நோய். ஆனால் அதை விட வேகமாக ஒரு மிகப்பெரிய கொடிய நோய் நாட்டில் அதிகரித்து வருகிறது, அதுதான் பாலியல் வன்கொடுமை.
ஒரு கிராமத்தில் இருந்து தன்னலமற்ற நகர வாழ்க்கை பற்றி அனுபவமே இல்லாத நான்கு நண்பர்கள் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் வாழ சென்னைக்கு வருகிறார்கள். இங்கே நடக்கும் அநியாயங்களை பார்த்து வியக்கின்றனர். ஒன்றும் தெரியாமல் கிராமத்தில் வாழ்ந்த நாமளே இதை தட்டிக் கேட்க வேண்டும் என்று துடிக்கையில் இங்கே இருக்கும் யாருமே அதை கண்டுகொள்ளாமல் சுயநலமாக இருப்பது எதனால். அவர்களது சூழ்நிலை என்ன.. ஏன் தட்டி கேட்க மறுக்கிறார்கள் என்ற அவர்களது கேள்விகளுக்கு விடைதான் படம். என்றார்.