தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், ஒலிவியா மோரிஸ், அஜய் தேவகன் மற்றும் பலர் நடிப்பில், ராஜமௌலி இயக்கி வரும் படம் 'ஆர்ஆர்ஆர்'. உக்ரைன் நாட்டில் பதினைந்து நாட்களுக்கு மேல் நடைபெற்ற படப்பிடிப்பை முடித்துக் கொண்டு படக்குழுவினர் ஹைதராபாத் திரும்பியுள்ளனர். இன்னும் சில விடுபட்ட காட்சிகளின் படப்பிடிப்பை முடித்ததும் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைகிறதாம்.
இப்படத்தை அக்டோபர் 23ம் தேதி வெளியிடப் போவதாக ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்த மாதம் அவர்கள் வெளியிட்ட பிரமோஷன் பாடலான 'நட்பு' பாடலிலும் கூட வெளியீட்டுத் தேதியைக் குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் தியேட்டர்கள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. மேலும், தியேட்டர்கள் திறக்கப்பட்ட பல மாநிலங்களிலும் 50 சதவீத இருக்கைகள் அனுமதிதான் கொடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட் என சொல்லப்படும் 'ஆர்ஆர்ஆர்' படத்திற்கு தியேட்டர்களை முழுமையாகத் திறந்து, முழு இருக்கைகள் அனுமதி கொடுத்தால்தான் அவர்கள் செலவிட்ட பட்ஜெட்டையும் மீறி வசூலிக்க முடியும். எனவே, படத்தின் வெளியீட்டை 2022ம் ஆண்டு கோடை விடுமுறையில் வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்துள்ளார்களாம். அது பற்றிய அறிவிப்பை விரைவில் பத்திரிகையாளர்களை சந்தித்து தெரிவிக்க உள்ளார்கள் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.