தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
விஜய் டிவியில் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் போன்று ஜீ தமிழ் சேனலும் சர்வைவர் என்றொரு புதிய நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜூன் தொகுத்து வழங்குகிறார்.
இதில் பங்குபெறும் போட்டியாளர்கள் ஒரு தனித்தனித்தீவில் விடப்படுவர். அதையடுத்து அவர்களுக்கு வழங்கப்படும் சவால்களில் வெற்றி பெற்று பரிசுகளை வென்று போட்டியில் இருந்து வெளியேறாமல் தங்களை அவர்கள் காத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் இந்தநிகழ்ச்சியின் கான்செப்ட்.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் 8 போட்டியாளர்களின் பெயர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், நடிகர்கள் விக்ராந்த், நந்தா, உமாபதி ராமைய்யா, நடிகைகள் ஸ்ருஷ்டி டாங்கே, விஜயலட்சுமி, காயத்ரி ரெட்டி, வில்லன் நடிகர் பெசன்ட் ரவி, தொகுப்பாளினி பார்வதி ஆகியோர் பங்கேற்கின்றனர். இதற்கான புரொமோ வீடியோ வெளியாகி உள்ளது.
செப்., 12 முதல் தினமும் இரவு 9.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.