துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
சிம்பு என்றாலே படப்பிடிப்புக்கு ஒழுங்காக வரமாட்டார். அட்வான்சை வாங்கிக்கொண்டு படத்தில் நடிக்க மாட்டார் என்று அவர் மீது ஏகப்பட்ட பஞ்சாயத்துக்கள் நடைபெற்று வருகிறது. என்றாலும் ஏஏஏ படத்தில் ஏற்பட்ட பிரச்னைக்குப்பிறகு ஒருவழியாக சுசீந்திரனின் ஈஸ்வரன் படத்தில் நடித்தார் சிம்பு.
அதன்பிறகு தற்போது மாநாடு படத்தில் நடித்துள்ளார். அதையடுத்து கவுதம்மேனனின் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இந்த நேரத்தில் சிம்பு படத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்ததால் தயாரிப்பாளர் சங்கத்துக்கும், பெப்சிக்குமிடையே மோதல் வெடித்துள்ளது. என்றாலும் வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், ஈஸ்வரன் படம் பெரிதாக வெற்றிபெறாத நிலையில், அந்த படத்தில் தமன் இசையில் உருவான மாங்கல்யம் என்ற பாடல் யூடியூப்பில் இதுவரை 150 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். அதனால் இத்தனை பிரச்னைகளுக்கு நடுவேயும் சிம்புவின் ரசிகர்கள் இந்த பாடல் சாதனை டிரெண்டிங் செய்து கொண்டாடி வருகிறார்கள்.