போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ரகுல் பிரீத் சிங்.. தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருபவர்.. இவரது யோகா பயிற்சி, உடற்பயிற்சி வீடியோக்களும் இணையத்தில் ரொம்பவே பிரபலம். இந்தநிலையில் யோகா பயிற்சியிலேயே ஏரியல் யோகா என்கிற புதுவிதமான பயிற்சியை செய்து ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளார் ரகுல் பிரீத் சிங். இவர் ஏரியல் யோகா செய்யும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகின.
இந்த ஏரியல் யோகா என்பது கிட்டத்தட்ட ஒரு நீண்ட துணியின் உதவியால் தரையை தொடாமல் சற்று உயரத்தில் அந்தரத்தில் பறப்பது போன்ற ஒருவித பயிற்சி ஆகும். அடிப்படை யோகா பயிற்சிகளில் கரை தேர்ந்தவர்களுக்கு இந்த ஏரியல் யோகா எளிதில் கைவந்துவிடும் என்கிறார் ரகுல் பிரீத் சிங்கின் யோகா பயிற்சியாளர் அனுஷ்கா.
இந்த ஏரியல் யோகா குறித்து ரகுல் பிரீத் சிங் கூறும்போது, “இதுபோன்ற பயிற்சிகள் செய்யும்போது ஆரோக்கியமான உடல்நலத்தின் முக்கியத்துவம் தெரிகிறது. என்னை பொறுத்தவரை உடற்பயிற்சி என்பது வெறும் உடல்ரீதியானது மட்டுமல்ல, மன ரீதியான மற்றும் உணர்வு ரீதியானதும் கூட. என்னதான் உங்கள் உடல் நிலையை வெளிப்புற காரணிகள் தீர்மானித்தாலும் எல்லா நேரங்களிலும் நீங்கள் எப்படி மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறீர்கள் என்பது தான் முக்கியம். முன்னெப்போதையும் விட இப்போது தான் உடல் நலத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.. இதுவரை ஆரம்பிக்காவிட்டால் உடனே ஆரம்பியுங்கள்” என கூறியுள்ளார்.
இதுமாதிரியான யோகா குறித்த உங்களின் கருத்துக்களையும், அனுபவங்களையும் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கலாம்.