துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
மார்வெல் ஸ்டுடியோஸ், கொலம்பியா பிக்சர்ஸ், பாஸ்கர் பிக்சர்ஸ் தயாரிக்க, ஜோன் வாட்ஸ் இயக்கத்தில், டாம் ஹாலந்த், ஸெந்தயா, பெனடிக்ட் கும்பர்பேட்ச் மற்றும் பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஸ்பைடர்மேன் - நோ வே ஹோம்'. இப்படத்தின் டிரைலரை இன்று(ஆக., 24) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுளளார்கள். இந்த 'ஸ்பைடர் மேன்' படத்தில் 'அவஞ்சர்ஸ்' படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றான டாக்டர் ஸ்ட்ரேன்ஜ் கதாபாத்திரமும் இடம் பெறுகிறது.
கடைசியாக வெளியான 'ஸ்பைடர் மேன்' படத்தில் அவர் யார் என்பது உலகத்திற்குத் தெரிந்துவிடும். அதன் காரணமாக சில பல பிரச்சினைகளை சந்திக்கிறார் ஸ்பைடர் மேன். அதனால், டாக்டர் ஸ்ட்ரேன்ஜிடம் உதவி கேட்கிறார். 'டைம் டிராவல்' முறையில் காலத்தின் பின்னோக்கி நகர்ந்து தான் யார் என்ற உண்மையைத் தெரிந்து கொண்ட மக்களிடம் அந்த நினைவுகளை அழிக்கச் சொல்கிறார். அப்படி செய்யும் போது டாக்டர் ஸ்ட்ரேன்ஜ் மந்திரத்தில் ஒரு கோளாறு நடந்துவிட, அதன் பின் நடக்கிறது இந்த 'ஸ்பைடர் மேன்' கதையாக இருக்கும் என டிரைலரைப் பார்த்து புரிந்து கொள்ள முடிகிறது.
இப்படம் உலகம் முழுவதும் டிசம்பர் 17ம் தேதி வெளியாகிறது. இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியிட உள்ளார்கள்.
டிரைலர் லிங்க் இதோ : https://www.youtube.com/watch?v=jIbQNjiX8ps&t=159s