பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

ராஜமவுலி இயக்கத்தில் சுதீப், சமந்தா நடித்த 'நான் ஈ' படத்தில் சமந்தாவின் காதலனாக நடித்தவர் நானி. தெலுங்குத் திரையுலகின் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் கதாநாயகனாக நடித்துள்ள 'டக் ஜகதீஷ்' என்ற படம் செப்டம்பர் 10ம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. படம் ஓடிடியில் வெளியாவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் தெலங்கானா தியேட்டர் உரிமையாளர்கள் பலர் நானிக்கு எதிராக கருத்து தெரிவித்தனர். அதன்பின் அதற்கு வருத்தம் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது பேசிய நானி, “நானும் தியேட்டர்காரர்களில் ஒரு அங்கம்தான், எனக்கும் அவர்கள் பிரச்சினை தெரியும். சூழ்நிலைகள் சரியாக இல்லாமல், எதிர்காலத்தில் தியேட்டர்களில் வெளியிட வாய்ப்புகள் வந்தாலும், என் படத்தை நான் ஓடிடி தளங்களில் வெளியிடும் முடிவை எடுப்பேன். மற்றவர்கள் எனக்குத் தடை போடுவதற்கு முன்பே எனக்கு நானே தடை போட்டுக் கொள்வேன். இந்த விவகாரத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் என்னை வெளியாள் போல நினைத்துவிட்டார்கள்,” என்றும் வருத்தப்பட்டுள்ளார்.
தென்னிந்தியத் திரையுலகத்தில் ஓடிடி தளங்களில் படங்களை வெளியிட தியேட்டர்காரர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறார்கள். இருப்பினும் நீண்ட காலம் தங்கள் படங்களை வெளியிட முடியாமல் தவிக்கும் சில தயாரிப்பாளர்கள் நல்ல விலை கிடைக்கும் போது அப்படங்களை ஓடிடி தளங்களக்கு விற்று விடுகிறார்கள்.