மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியாபட் என பலரது நடிப்பில் ராஜமவுலி இயக்கியுள்ள பிரமாண்ட படம் ஆர்ஆர்ஆர். இந்த படத்தின் அனைத்துக்கட்ட படப்பிடிப்புகளும் முடிவடைந்து இறுதிக்கப்பட்ட பணிகள் நடக்கின்றன. இப்படத்தை வருகிற அக்டோபர் 13-ந்தேதி வெளியிடப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார் ராஜமவுலி. ஆனால் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றபோது அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அடுத்த ஆண்டு எப்போது ரிலீஸ் என்பதை இன்னும் ராஜமவுலி உறுதிப்படுத்தவில்லை.
இந்தநிலையில் இப்படி ஆர்ஆர்ஆர் படத்தின் ரிலீஸ் தேதியை ராஜமவுலி உறுதிப்படுத்தாமல் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது, சமீபத்தில் ஹிந்தியில் அக்சய்குமார் நடிப்பில் வெளியான பெல்பாட்டம் படம் வெறும் ரூ.25 கோடி தான் வசூலித்துள்ளது. அதனால் இந்த நேரத்தில் ஆர்ஆர்ஆர் படத்தை வாங்க முன்வரும் வட இந்திய விநியோகஸ்தர்கள் குறைவான தொகைக்கே படத்தை கேட்பார்கள் என்பதால், அடுத்தடுத்து புதிய படங்கள் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெறும் போது படத்தை வெளியிடுவது பற்றி முடிவெடுக்கலாம் என்று தான் தாமதம் செய்து வருகிறாராம் ராஜமவுலி.