தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
'பிக் பாஸ்' ரியாலிட்டி ஷோ தமிழ், தெலுங்கில் ஒரே ஆண்டில் 2017ம் ஆண்டு ஆரம்பமானது. தெலுங்கில் முதல் சீசனை ஜுனியர் என்டிஆர், இரண்டாவது சீசனை நானி ஆகியோர் தொகுத்து வழங்கினர். கடந்த மூன்றாவது, நான்காவது சீசன்களை நாகார்ஜுனா தொகுத்து வழங்கினார். இந்த வருடத்தின் ஐந்தாவது சீசனையும் நாகார்ஜுனாவே தொகுத்து வழங்குகிறார்.
நாளை செப்டம்பர் 5 மாலை 6 மணிக்கு இந்த 5வது சீசனின் முதல் எபிசோடு ஒளிபரப்பாக உள்ளது. நாளை பங்கேற்கும் போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சி ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் ஒளிபரப்பாக உள்ளது. அதன்பின் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 9 மணிக்கும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். கடந்த நான்காவது சீசன் அதிகப் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு ரேட்டிங்கிலும் சாதனை படைத்துள்ளது. அதை முறியடிக்கும் விதத்தில் ஐந்தாவது சீசனை உருவாக்க திட்டமிட்டுள்ளார்களாம்.
இந்த சீசன் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நாகார்ஜுனா, “ரசிகர்களுக்கும் நேயர்களுக்கும் மகிழ்ச்சியுடன், சிறந்த பொழுதுபோக்கைத் தருவதே எங்களது நோக்கம். ஒரு கலைஞனாக, போட்டியாளர்களின் உண்மையான உணர்வுகளை எடுத்துச் செல்ல எதிர்நோக்கியுள்ளேன். அதன் மூலம் டிவி பார்க்கும் நேயர்களும் அதைப் புரிந்து கொள்ள முடியும்,” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சீசனில் கடும் போட்டியும், சண்டையும் தெலுங்கு பிக் பாஸில் இருந்தது. இந்த ஆண்டும் அதே அளவிற்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.