கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' |
ஜோக்கர், ஆண்தேவதை போன்ற படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். ஆனபோதும் அதன்பிறகு அவருக்கு படவாய்ப்புகள் இல்லை. இதனால் விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் கவனத்தை திருப்பிய அவருக்கு பிக்பாஸ்-4 திருப்புமுனையாக அமைந்தது. சினிமாவில் நடித்தபோதுகூட யாருக்குமே தெரியாமல் இருந்து வந்த அவர் குக் வித் கோமாளி, பிக்பாஸிற்கு போன்ற நிகழ்ச்சிகளுக்கு பின் இன்னும் பிரபலமாகி விட்டார்.
அதனால் மறுபடியும் சினிமாவில் பெரிய அளவில் என்ட்ரி கொடுக்க வேண்டும் என்று சோசியல் மீடியாவில் அதிரடியான போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்த ரம்யாபாண்டியனுக்கு தற்போது சூர்யா தயாரிக்கும் ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்படம் வரைவில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இதையடுத்து கமர்சியல் கதைகளில் நடிப்பதற்கு இரண்டு நிறுவனங்கள் ரம்யா பாண்டியனிடத்தில் பேசி வருகின்றன. அதனால் தனது முந்தைய படங்களில் எல்லை தாண்டாமல் நடித்திருந்த அவர், அடுத்தபடியாக நடிக்கும் புதிய படங்களில் எல்லை தாண்டிய கவர்ச்சி கலாச்சாரத்துக்கு மாறிவிடுவார் என்கிற தகவல்களும் வெளியாகியுள்ளன.