நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் |
வெத்துவேட்டு படத்தை இயக்கிய இயக்குனர் எஸ்.மணிபாரதி, ‛தி ஜர்னி ஆப் பெட்' என்ற தமிழ் படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்க, சிருஷ்டி டாங்கே நாயகியாக நடிக்கிறார். ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி புகழ் பப்பு, தேவிபிரியா, மலையாள நடிகை திவ்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படம் குறித்து மணிபாரதி கூறியதாவது: இது சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியுள்ள ஒரு வீக் எண்ட் மூவி. ஒரு விஷயத்தை குருட்டாம்போக்கில் அணுகினால், அது மேலும் நம்மை சிக்கலில் கொண்டுபோய் விடும் என்பதை மையப்படுத்தி இந்த கதையை உருவாக்கியுள்ளோம். சிருஷ்டி டாங்கே இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குறைந்த ஆடை அணிந்து, கடுங்குளிரில் நடுங்கியபடியே சிருஷ்டி டாங்கே நடித்து கொடுத்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.