கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கு வந்த சின்ன குஷ்பூ நடிகை | நீரும் நெருப்பும், ராஜாவின் பார்வையிலே, வேலையில்லா பட்டதாரி-2 - ஞாயிறு திரைப்படங்கள் | இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் |
துப்பாக்கி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் பாலிவுட் நடிகர் வித்யுத் ஜாம்வால்.. தொடர்ந்து பில்லா-2 படத்திலும் அஜித்துடனும், சூர்யாவுக்கு நண்பனாக அஞ்சான் படத்திலும் நடிதிருந்தார். தற்போது பாலிவுட்டில் சோலோ ஹீரோவாகவும் தனது திறமையை நிரூபித்து வருகிறார்.
நாற்பது வயதாகும் வித்யுத் ஜாம்வால், விரைவில் திருமண பந்தத்தில் இணைய போகிறார்.. ஆம்.. பிரபல பேஷன் டிசைனர் நந்திதா மதானி என்பவரை காதலித்து வருகிறார் வித்யுத் ஜாம்வால். விராட் கோலி உள்ளிட்ட பிரபலங்களின் ஹேர்ஸ்டைலிஸ்ட்தாகவும் பணியாற்றும் நந்திதா மதனி ஏற்கனவே தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து பின்னர் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றவர்.
இந்தநிலையில் வித்யுத் ஜாம்வால், சமீபத்தில் நந்திதாவுடன் மோதிரம் மாற்றி திருமண நிச்சயதார்த்தமும் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. தாஜ்மஹால் பின்னணியில் இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் அதை உறுதிப்படுத்துகின்றன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.