மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
செய்தி வாசிப்பாளராகவும், சீரியல் நடிகையாகவும் தனது வாழ்க்கையை தொடங்கிய பிரியா பவானி ஷங்கர் தற்போது ரசிகர்கள் விரும்பும் நடிகையாகி இருக்கிறார். சமூக வலைதளங்களில் தீவிரமாக இருக்கும் பிரியா பவானி சங்கர், தனது வித விதமான படங்களை பகிர்ந்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு அதில் 'திங்கள் கிழமையாக இருந்தாலும் வெள்ளிக்கிழமை போல இருங்கள்' என்று கேப்ஷனையும் போட்டு இருந்தார். பிரியா பவானி ஷங்கரின் இந்த பதிவை பலர் லைக் செய்தாலும் ஒரு சிலர் நெகட்டிவ் கமெண்ட்களை போட்டனர். உங்களுக்கு போர் அடிக்காதா? என்று கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த பிரியா பவானி ஷங்கர் 'நீங்கள் சொல்வது முழுமையாக புரிகிறது, என்னுடைய பதில் என்னவென்றால் கண்டிப்பாக எனக்கு போர் அடிக்காது. செய்யும் வேலைக்கு கைநிறைய சம்பளம் கிடைக்கும் போது அப்படி இருக்காது' என்று பதில் அளித்துள்ளார்.