2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் | திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' | பிளாஷ்பேக் : ஜெமினி கணேசனுக்கு வில்லனாக நடித்த சிவாஜி கணேசன் | ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு |

சிவகார்த்திகேயன் தற்போது சிபி சக்கரவர்த்தி டைரக்ஷனில் டான் என்கிற படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் முன்பாகவும் நடைபெற்றது. கிட்டத்தட்ட முக்கால்வாசி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் விரைவில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருக்கிறது.
இதற்காக எல்லாம் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒதுக்கிவிட்டு இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டருக்காகவே தனியாக சிவகார்த்திகேயனை வைத்து போட்டோஷூட் நடத்தப்பட்டுள்ளது. போட்டோஷூட்டில் கலந்து கொண்ட அதே தோற்றத்திலேயே சிவகார்த்திகேயன் எடுத்துக்கொண்ட குரூப் போட்டோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் அருண் விஜய் நடித்து வரும் யானை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. ஆனால் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னதாகவே தனியாக போட்டோஷூட் நடத்தி எடுக்கப்பட்டு பாதி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் வெளியிடப்பட்டது. அதேசமயம் சிவகார்த்திகேயனின் டான் படப்பிடிப்பு பாதி நடைபெற்ற நிலையில், தற்போது தான் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக என தனியாக போட்டோஷூட்டே நடத்தியுள்ளார்கள்.