நான் ஹிந்தியில் படம் இயக்கினால் இவர்தான் ஹீரோ : வினோத் | மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதா ? நடிகர் ஜெயசூர்யா மறுப்பு | பராசக்தி படத்தை வெளியிட தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | பத்து நாள் ராஜாவாக சதீஷ் | சிறிய படங்களின் பிரச்னைகள் தீருமா? | ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு | புத்தாண்டை முன்னிட்டு எத்தனை படங்களின் அப்டேட் வந்தது தெரியுமா ? | தியேட்டர்களை எதிர்த்து ஓடிடியில் வெளியான 'சல்லியர்கள்' | தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! |

வலிமை படத்தின் படப்பிடிப்பை முடித்த நடிகர் அஜித், தற்போது டில்லியில் நடைபெற இருக்கும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக சமீபத்தில் டில்லி சென்ற நடிகர் அஜித், அங்கு தீவிர பயிற்கு மேற்கொண்டு வருகிறார்.
ஓய்வு நேரத்தில் டில்லியில் உள்ள தாஜ்மஹாலை பார்க்க சென்றிருக்கிறார் அஜித். இதன் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. தற்போது பைக்கில் தனியாக உலகம் சுற்றி வந்திருக்கும் மாரல் யசர்லோவை சந்தித்து பேசிய புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில், நடிகர் விஜய்யை அஜித் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பீஸ்ட் படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய்யும் டில்லிக்கு சென்றிருக்கிறார். விமான நிலையத்தில் விஜய் நடந்து செல்லும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானது. அஜித், விஜய் ஒரே சமயத்தில் டில்லியில் இருப்பதால் இருவரும் நேரில் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.